Wednesday, July 16, 2008

என் நெஞ்சு பொறுக்குதில்லையே!

சமுதாயப் பூங்காவில் சாதியாம் கள்ளியேன்?
அமுதான பெண் மகவை அழிக்க நினைப்பதேன்?
நமதூரில் நம் தமிழை நசுக்க நினைப்பதேன்?
பண்டைய நற்பண்பெல்லாம் பட்டுத்தான் போவதேன்?

எம நாடும் வெறுக்கின்ற ஏராளக் கொலைகளேன்?
வெண்பணி மீதெல்லாம் இரத்தக்கறை காண்பதேன்?
ஓடும் நீருக்கு ஓராயிரம் தடைகளேன்?
கூடும் வழியிருந்தும் கோடிவகை சண்டையேன்?

காவி உடைக்குள்ளே கருநாகம் புகுந்ததேன்?
காடு குறைந்ததேன்? கழனிஎல்லாம் காய்ந்ததேன்?
அரசியல் பெயராலே அநியாயங்கள் நிகழ்வதேன்?
நாவில் நரம்பில்லா நீசர்களும் வாழ்வதேன்?

பெண்ணவளை மணப்பதற்கு பெருந்தொகையை கேட்பதேன்?
மண்ணவளும் நாணுகிறாள் மக்களிதை மறப்பதேன்?
நாநிலத்து நிகழ்வுகளைக் கண்டு என்நெஞ்சு பொறுக்குதில்லையே?
ஏனிந்த கொடுமையெல்லாம் எனக்குரைக்கமாட்டீரோ?

8 comments:

சுபலலிதா said...

Mam,
great one mam...super.. u will win prize..and thanks so much for having participated in the competition...

"உழவன்" "Uzhavan" said...

//ஏனிந்த கொடுமையெல்லாம் எனக்குரைக்கமாட்டீரோ? //
 
கலி முத்திப் போச்சு அதான் :-)
வாழ்த்துக்கள்

அவனி அரவிந்தன் said...

கவிதையின் கருத்துகள் நன்று. வெற்றி பெற வாழ்த்துக்கள் !

kaythry said...

thanks u suba, nandri Thiru Avani Aravindan

kaythry said...

nandri, thriu uzhavan avargale

Radhakrishnan said...

மனிதர்களின் எதிர்பார்ப்புகளினால் பிரச்சினை அதிகமாகிவிட்டது.

பத்மா said...

een een een
therilaiye
nalla irukku all the best
padma

Sakthi said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்