Monday, October 12, 2009

கனவுகள்

நினைவோடு
நிறைந்த
என் நிழலான
நிஜங்கள் .

கிறுக்கல்கள்

நீல வானம்
மஞ்சள் சூரியன்
வெள்ளை நிலா
இப்படியாய் ...........ஆனால்
நான் மட்டும்
அவள்.

அனுபவம்

காணிக்கையாக்கிவிட்டேன்
கண்ணீரை எல்லாம்
கரையவில்லையே
கல்லான கடவுள் ....

Sunday, October 11, 2009

அன்புக்கு ஆதரவு....

கண்கள் நீர்த்திரையாகின்றன
அதில்
காரணங்கள் கரைந்துவிடுகின்றன.

அலைகழிக்கப்படும் போதுதான்
அன்பும் அகதியாகிறது.

ஏக்கங்களின் இருப்பிடம்
இல்லாமல் போனதால்
அக்கறையும் இங்கே
அவஸ்தையாகிறது.

பாரபட்சமின்றி
புரிதலும் இங்கே
ஓரிடத்தில் புதைக்கபடுகிறது
முறைதானா?

பொன்னோ பொருளோ
அல்ல
அன்புதானே
ஆதரவு கரம் கொடுங்கள்
என்றும் அன்பாய்....

நினைவுகள்....

அதே இரயில் நிலையம்
அதே நடை மேடை
அதே இருக்கைகள்
ஆனால்
இன்று யாரோ இருவரை
சுமந்து கொண்டு இருக்கிறது ......

ரொம்ப நாளா......

மரங்கள் அடர்ந்த
நீண்டதொரு சாலை
அரவமற்ற பின்னிரவு
வருடும் தென்றல்
நான்
மௌன மொழி பேசி
உன் விரல் கோர்த்து
காலார வெகுதூரம்
நடை பழக வேண்டும்