Friday, December 11, 2009

அவளும் அவனும் ...

ஆர்பரித்து கொண்டு
இருக்கிறான் - அவன்
அவளின் வருகைக்காக .

கறைபடிந்தவன் அவன்
தூயவன் இல்லை -
அவளைப்போல்.

பாவம் அவளோ
திக்கற்று திரிவாள்
அவனை சேரவே.

அவனே என்று
சரண் ஆவாள் - அவளின்
ஜீவன் இருக்கும் வரை.

உதித்ததே அவனுக்கென்று
உரிமையாய் உன்னதம்
இழப்பாள்.

அவளும் அவனும்
சங்கமிக்கும்
பிரதேசங்கள் கூட
ஒருவகை மயானம் தான்

ஆம் அவள் நதி
அவன் கடல் ...