ஆர்பரித்து கொண்டு
இருக்கிறான் - அவன்
அவளின் வருகைக்காக .
கறைபடிந்தவன் அவன்
தூயவன் இல்லை -
அவளைப்போல்.
பாவம் அவளோ
திக்கற்று திரிவாள்
அவனை சேரவே.
அவனே என்று
சரண் ஆவாள் - அவளின்
ஜீவன் இருக்கும் வரை.
உதித்ததே அவனுக்கென்று
உரிமையாய் உன்னதம்
இழப்பாள்.
அவளும் அவனும்
சங்கமிக்கும்
பிரதேசங்கள் கூட
ஒருவகை மயானம் தான்
ஆம் அவள் நதி
அவன் கடல் ...
Friday, December 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இதே சூழலில் இருக்கும் ஒரு தமிழ்ப்பாடல் தான் நினைவுக்கு வருகிறது... "தலையை குனியும் தாமரையே".... இந்த பாடலில் வரும் வரிகள் இதோ...
பெண்: முதல் முறையா...
ஆண்: இது சரியா...
பெண்: சரி சரி பூவாடை காற்று ஜன்னலை சாத்து
ஆண்: உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
பெண்:
இரண்டு நதிகள் இணைந்து நடத்தும் புதிய அலைகள் தரையை உடைக்கும்
Post a Comment