Sunday, June 13, 2010

என் கவிதைகளின் கருவாய் .....

என் கவிதைகளின் கருவாய்

ஆற்றாமையே அகப்படுகின்றன
காரணம் - அந்த
சந்தர்ப்பங்களின்
தாக்கம் - என்னைi
விடுவிப்பதில்லை
இல்லை இல்லை
நான் என்னை
விடுவித்துக்கொள்ள
மறந்துவிடுகிறேன்.

என் கவிதைகளின் கருவாய்
கறைபடிந்த கண்ணீர்
இருப்பதாய் குற்றச்சாட்டு
காரணம் - நான்
சோகங்களில் மட்டுமே
இன்பத்தை காண்கிறேன் .

இன்னும் சிலர் - நான்
வட்டத்துக்கு வெளியே
இருந்து - நிஜத்தை
நிந்திப்பதாய் பேச்சுக்கள் ..
உண்மை எதுவாகினும்
வார்த்தை தர்கத்திற்கு
நான் தோது இல்லை.

வாழ்வை ரசித்துதான்
வார்த்தைகள் வருகின்றன
துன்பத்தின் வடு
எல்லாம் இனி
சுகமாய் வருடும்
என்கிற ஏக்கத்துடன்
என் கவிதைகளின் கரு ......

No comments: