Monday, November 18, 2013

இப்படிக்கு,

         வேண்டாதவைகளை
           இலவசமாய்
           வாங்கிக்கொள்ள , நாங்கள்
           இருந்தாலும்...
            தார்மீக பொறுப்பு
            தற்காலிகமாய் ஏற்கப்படும்
            என்று தலையில் அடித்து
            சொன்னாலும்
            கவனிப்பார் இன்றி
            அவலமாய் கிடக்கிறோம்
            இப்படிக்கு,
           குப்பைத்தொட்டிகள்
            இந்திய தெருக்களிலிருந்து.  
          
 
 

Thursday, August 01, 2013

நண்பனின் சித்திரம்

வண்ணங்கள் உருமாறி 
வடிவங்களால் மெருகேறி
விரல்களின் வித்தைகளால்  
சித்திரமாய் உயிர்பெற்று 
விழியோடு கதைபேசி 
நெஞ்சத்தின் நிகழ்வுகளாகி 
நினைவுகளோடு உறைந்த  
உந்தன்  படைப்புகள் 
காலத்துக்கும் 
கலைகளுக்கு சான்று.
நீயோ 
கலைஞனுக்கு சான்று.