Tuesday, December 23, 2008

தெளிவு

கற்பனைகள்
கண்முண் தோண்றாது
காட்சி பிம்பமாய்
கரைந்துவிட்டதால்
ஏன் இந்த அவலம்
இன்னும் புலப்படவில்லை.
ஒரு வேளை
உணர்ச்சிகள் உத்வேகத்துடன்
இல்லையோ -- அதனாலோ
ஏக்கங்கள் ஏக்கத்துடன்
என்னை நோக்குகின்றன
என்செய்ய - என்றாலும்
தெளிவுக்காக
தெளிந்துகொண்டு இருக்கிறேன்.

கற்பனை

யார் உரைத்தது
கவிஞன் பொய்யன் என்று
உணர்வுகளின் வெளிப்பாடு
நனவாகும் என்ற
எண்ண அலைகள்
ஆக்கத்திற்கு
ஏக்கத்துடன்
எழுதுகிறான்
பண்பாளனுக்கு - அவனும்
பறைசான்று .

Monday, November 17, 2008

ஏற்றம் இங்கே!

மண்ணெண்ணெய் விளக்கில்
மாணவன் படிக்கிறான்
Computer Science .

நான் அவனுக்கு.........

தினம் தினம் இங்கே ...................
வேடிக்கைதான்
கேளிக்கை பொம்மையாய்
கடவுளுக்கு
நானிருக்க.

Monday, October 13, 2008

தனிமைக்கு துணையாய்.....

தனிமையே! என்னை
தலைநிமிரச் செய்தாய்
தன்னிச்சையாய் வாழ்ந்தேன்
மௌனப் பேச்சினால்
உலகை உணர்த்தினாய்
வெற்றிடத்தை கொண்டே
வேதங்கள் சொன்னாய்
உண்மையில் -- நான்
உன்னை நேசிக்கிறேன்
ஆம் -- நீ
என் கனவுகளின் கோயில்
இதயத்தின் ஓசை -நீ
சோகங்களின் துயரம்
ஆனந்ததின் அரவணைப்பு
ஆனாலும் இங்கே
நம்மை பிரிக்க - அடிக்கடி
சதி அரங்கேருகிறது
ம்ம்.....
பல தருணங்களில்
நான்கு சுவர்களுக்குள் நானா?
எனைச் சுற்றி நான்கு சுவர்களா?
நமக்குள் போட்டி இங்கே,
இலக்கு எனக்கானது?
வெற்றி உனக்கானது
என்றாலும் - என்றென்றும்
தனிமையே! உனக்கு துணையாய்
உறவாட நான்.
















அன்புள்ள ஆண்டவருக்கு . . ...

கனத்த இதயத்தோடு
இந்த கடிதத்தை
எழுதுகிறேன்
எங்கே தொடங்க..?
ஏதும் புலப்படாது...
எண்ணத்தின் சிதறல்கள்
இங்கே
நிறையும் குறையும்
உனக்கே சமர்ப்பணம்
இன்பமாய் இருக்கிறேன்
துன்பத்தில்
எனினும் நன்றிகள் கோடி
இந்த சுமைகளை
சுமக்க கற்பித்தாய் - இருப்பினும்
தாங்கிய தோள்களில் - இன்னும்
வடு மறையவில்லை. . . .
ஆம், -- நான்
பாதைகள் இல்லா ஊருக்கு
பயணம் செய்துகொண்டு இருக்கிறேன்
வழி நடத்திச் செல்ல
விழியாய் இருப்பாய் என்கிற
பேராசையுடன்..
ம்ம்ம்.... வேண்டுதலுடன்
முடிக்கிறேன்
இயலுமானால் மகிழ்ச்சி
என்று
மறுமடல் எழுதவும்.

இப்படிக்கு,
நான்.

Sunday, September 21, 2008

வாழ்க்கை பயணத்தில்.........

வெற்றித் துருவ விளிம்பில்
நான்
இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன்
தோல்விகளோடு

Thursday, September 11, 2008

உறவுகள்

அன்று
உரிமை போராட்டம்
என்றீர்

இன்று
உறவு போராட்டம்
என்கிறீர்

உணர்வில் பிறப்பதுதான் உறவு
ஆதலால்
உணர பழகுங்கள்
உறவுகள் பலப்படும்!

Wednesday, July 16, 2008

என் நெஞ்சு பொறுக்குதில்லையே!

சமுதாயப் பூங்காவில் சாதியாம் கள்ளியேன்?
அமுதான பெண் மகவை அழிக்க நினைப்பதேன்?
நமதூரில் நம் தமிழை நசுக்க நினைப்பதேன்?
பண்டைய நற்பண்பெல்லாம் பட்டுத்தான் போவதேன்?

எம நாடும் வெறுக்கின்ற ஏராளக் கொலைகளேன்?
வெண்பணி மீதெல்லாம் இரத்தக்கறை காண்பதேன்?
ஓடும் நீருக்கு ஓராயிரம் தடைகளேன்?
கூடும் வழியிருந்தும் கோடிவகை சண்டையேன்?

காவி உடைக்குள்ளே கருநாகம் புகுந்ததேன்?
காடு குறைந்ததேன்? கழனிஎல்லாம் காய்ந்ததேன்?
அரசியல் பெயராலே அநியாயங்கள் நிகழ்வதேன்?
நாவில் நரம்பில்லா நீசர்களும் வாழ்வதேன்?

பெண்ணவளை மணப்பதற்கு பெருந்தொகையை கேட்பதேன்?
மண்ணவளும் நாணுகிறாள் மக்களிதை மறப்பதேன்?
நாநிலத்து நிகழ்வுகளைக் கண்டு என்நெஞ்சு பொறுக்குதில்லையே?
ஏனிந்த கொடுமையெல்லாம் எனக்குரைக்கமாட்டீரோ?

Wednesday, July 02, 2008

Monday, May 05, 2008

கண்ணீர்!

எங்கோ பெய்யும்
மழைக்கு,
என் ஊரில்
ண் வாசம்!

இதுவும் உண்மை!

சோகங்கள் ..,
சொல்லிக்கொண்டு வந்தால்
இயற்கை ,
இல்லாமல் போகும்.

Wednesday, April 16, 2008

ஆழிப்பேரலையின் தாக்கத்தில்................

கோழை கடலே!
எங்கள் மீது..
அப்படி என்ன காழ்புணர்ச்சி
இப்படி பொங்கி எழுந்துவிட்டாயே?

உன்னை நம்பியவர்களை
உதாசீனப்படுத்திவிட்டாயே?
இந்த கோர சோதனை எங்களுக்கு எதற்காக?
எங்களின் ஈகை திறனுக்கா?
மானுட அமைதிக்கா?
மத ஒருமை பாட்டிற்க்கா?
உன் பொறுமையின் எல்லைக்கா?

எங்களை கூண்டோடு வேரருக்க நீனைத்ாயே..
இது என்ன நியாயம்?
இதனால் உன் கோரப் பசி தீர்ந்ததோ?
சொல்லில் அடங்கா சோகங்களோடு..
பச்சிளம் பாலர்களும் கேள்விக்குரியாய் -- இங்கே
பட்டினியாய் பதில் தேடுகிறார்கள்.
குடும்பங்களை இழந்தோறும்
குழந்தைகளை இழந்தோறும்
என .. ...... நீ செய்த கொடுமைகள்
கணக்கிலடங்கா .....

மரியாதைக்குறியதுதான் மனிதனுக்கு மரணம்
ஆனால் ..........சுழலும் பூமியே!
கடலோ உீரைக்குடித்தது--
நீயோ உடல்களை உனதாக்கிக்கொண்டாய்.
இது உங்களின் கூட்டுச்சதியோ?
ம்ம்,,,,,,

Friday, April 04, 2008

சில நேரங்களில் நான். . . . . . . . .

ஏதோ ஓர் எண்ணம்
உலி போல என்னை
உரு பெறச் செய்யுமோ?
வலிகள் தாளாமல்
விவரிக்க முடியா நிலையில் நான்.........

என் இனிய நண்பர்களே!!!!!

இந்த இயந்திர சூழலில்
சில இனிய நொடிகள்
பிறருக்காகவும் நாம்
என்பதை பறைசாற்ற
ஓர் தருணம்

பல உறவுகளில்
நம் உணர்வுகள்
வெளிப்படுவது சிலரிடமே
அந்தச் சிலரில்
நட்புக்குரியோர் பலர்

பந்தகளில் இல்லா பிணைப்பு
நேசம் மட்டுமே பேசும்
துன்பத்தில் தலைசாய்கக
இன்பத்தை இளைப்பாற
வெற்றி முழுமையாக

எதிர்பார்ப்ில்லா அன்பு
எளிமையான ஆர்ப்பாட்டம்
உரிமை சண்டைகள்
உதவியின் அரவணைப்பு
உள்ளப் பகிர்வுகள்

ம்ம் இப்படி.....
என்னோடு சிலர் ஆன
தோழியரே, நண்பர்களே
உங்களை கொண்டாட
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்


காய்த்ரி. பா